தோக்யோ, ஆகஸ்ட்-14 – வலுவான நிலநடுக்கம் ஏற்படும் போது கட்டங்கள் தரைமட்டமாவதையும் தீப்பிடித்து எரிவதையும் அடையாளம் கண்டு விரைந்து நடவடிக்கை எடுத்திட ஏதுவாக, AI அதிநவீன தொழில்நுட்ப முறையை ஜப்பான் களமிறக்கியுள்ளது.
உயர் சக்தி கொண்ட கேமராக்கள் அதில் பயன்படுத்தப்படுகின்றன.
தலைநகர் தோக்யோவில் உள்ள அரசாங்க கட்டடங்களில் 2 கேமாராக்களும், முக்கியப் பாலமொன்றில் ஒரு கேமராவும், தோக்யோவின் மேற்கே ஒரு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளன.
இடிந்து விழுந்த கட்டடங்களின் இடிபாடுகள் குறித்தும் தீப்பற்றிக் கொண்ட வீடுகள் குறித்தும் போலீஸ், தீயணைப்பு மீட்புத் துறை உள்ளிட்ட துறைகளுக்கு இப்புதிய AI முறை நேரடியாக தகவல்களை அனுப்பும்.
அதோடு, பலகை வீடுகளால் ஆன குடியிருப்புப் பகுதிகளையும் அக்கேமராவால் துல்லிதமாக அடையாளம் காண முடியும்.
நிலநடுக்கத்தில் மோசமான சேதங்கள் ஏற்படும் அபாயமிருக்கும் பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்க பாதுகாப்புப் படையினருக்கு அது வாய்ப்பாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மார்ச் முதலே அம்முறை செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.
அடுத்தாண்டு மார்ச்சுக்குள், சுமார் 23 பகுதிகளை உள்ளடக்கி மேலுமிரண்டு கேமராக்களைப் பொருத்த இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
Nakai Trough நெடுகிலும் வலுவான நிலநடுக்கங்கள் நிகழும் அபாயம் அதிகரித்திருப்பது குறித்த முதல் எச்சரிக்கையை, ஜப்பானிய வானிலை ஆராய்ச்சி நிறுவனம் கடந்த வாரம் தான் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.