
ஆக 21 – இந்தியாவின் சந்திராயன்-3 இன்னும் இரண்டு நாளில் நிலவில் தரையிறங்கவிருக்கும் நிலையில் அதனுடைய விக்ரம் லேண்டர், நிலவின் மேற்பரப்பு படங்களை இஸ்ரோ நிலையத்திற்கு அனுப்பியுள்ளது.
அது, விக்ரம் லேண்டரின் ஆபத்தை கண்டறிந்து விளக்கும் கேமிராவிலிருந்து எடுக்கப்பட்ட படங்களாகும். விக்ரம் ஆகஸ்டு 23-ஆம் திகதி, அனைத்துலக நேரப்படி 6.04 மணிக்கு தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது.