
ஆக 27 – நிலவின் தென் துருவத்தில் சந்திராயன்-3ன் விக்ரம் ரோவர் தடம் பதித்த இடம் இனி “சிவசக்தி” புள்ளி என பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
தமது கிரீக் நாட்டிற்கான பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய மோடி நேரடியாக இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்த போது இந்த அறிவிப்பைச் செய்தார்.
யாரும் இது வரையில் தரையிறங்காத நிலவின் தென் துருவத்தில் இந்தியா முதன் முதலில் வெற்றிகரமாக தரையிறங்கியது
இந்த வெற்றியை இந்தியாவின் விண்வெளி திட்டத்தில் ஓர் அசாதரணமான மற்றும் சரித்திரப்பூர்வ நிகழ்வு என வர்ணித்தார் மோடி.
இந்நிலையில் 2019 சந்திராயன்-2ன் Lander நிலவில் மோதிய இடத்தை “திரிங்கா” புள்ளி என பெயரிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வருகையின் போது சந்திராயன்-3ன் திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் மாதிரி விக்ரம் லேண்டரை மோடிக்கு நினைவாக பரிசளித்தார்.