
ஆக 23 – இன்று நிலவின் தென் துருவத்தில் இந்தியாவின் சந்திராயன் 3 வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைக்குமா என இந்திய நாட்டு மக்கள் மட்டுமின்றி உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த மக்களும் மிக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவின் மிகப்பெரிய கனவுத் திட்டமான இதற்கு 700 கோடி ரூபாய் செலவிடப்பட்ட நிலையில், 1000 பொறியியலாளர்கள் இத்திட்டத்தின் வெற்றிக்காக இரவும் பகலும் உழைத்து வருகின்றனர்.
சந்திராயன் 2 திட்டத்தின்போது K.சிவன் இஸ்ரோவின் தலைவராக இருந்த பட்சத்தில் தற்போது S.சோமனாத் அப்பொறுப்பில் இருக்கிறார்.
சந்திராயன் 3 திட்ட இயக்குனராக சென்னையைச் சேர்ந்த வீர முத்துவேல் தலைமையேற்றிருக்கிறார்.
தென் துருவத்தில் இதுவரை எந்த நாடும் தரையிறங்காத நிலையில், இன்று முதல் முதலாக சந்திராயன் 3 தரையிறங்கினால், அது இந்தியாவிற்கு விண்வெளி ஆராய்ச்சியில் இன்னொறு மைல்கல்லாக அமையும்.
அதே சமயத்தில் அமெரிக்கா, சீனா, ரஷியாவுக்கு அடுத்து நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடு எனும் பெருமையையும் இந்தியா பெறும்.