
புது டெல்லி, நவம்பர் 20 – 2022-ஆம் ஆண்டு மார்ச் நான்காம் தேதி, நிலவில் நிகழ்ந்த விநோதமான சம்பவம் ஒன்றின் மர்ம முடிச்சை ஆராய்ச்சியாளர்கள் அவிழ்த்துள்ளனர்.
சீனாவிலிருந்து வழிதவறி சென்ற Long March 3C எனும் ராக்கெட், நிலவின் மேற்பரப்பில் மோதி விபத்துக்குள்ளானதே, அந்த விநோத நிகழ்வுக்கான காரணம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அதன் தாக்கத்தால், நிலவின் ஹெர்ட்ஸ்பிரங் பள்ளத்திற்கு அருகில், இரட்டை பள்ளம் உருவாகியதாக கூறப்படுகிறது.
அரிசோனா பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானிலையாளர்கள் சிலர், தரை அடிப்படையிலான தொலைநோக்கிகளை கொண்டு மேற்கொண்ட பகுப்பாய்வு வாயிலாக அந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
அந்த முடிவை அமெரிக்க விஞ்ஞானிகளும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
எனினும், பூமியில் வளிமண்டலத்திலேயே Long March 3C ராக்கெட் எரிந்து போனதாக கூறி, அந்த கண்டுபிடிப்பை சீனா நிராகரித்துள்ளது.