
ஆக 30 – நிலவில் தரையிறங்கியுள்ள சந்திராயன் 3ன் விக்ரம் லேண்டரை படம் பிடித்துள்ளது பிராக்யன் ரோவர்.
அந்த புகைப்படத்தினை “X” தளத்தில் வெளியிட்டிருக்கிறது இஸ்ரோ.
ஆகஸ்டு 23ஆம் திகதி வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியதிலிருந்து விக்ரம் லேண்டரும், பிராக்யன் ரோவரும் தங்களின் பணிகளை செவ்வனே செய்து வருகின்றன.
இதனிடையே, நிலவின் தென் துருவத்தில் ‘சல்பர்’ இருப்பதை உறுதிபடுத்தியுள்ளது விக்ரம் லேண்டர். பிராக்யன் ரோவரில் பொருத்தப்பட்ட லேசர் கருவியின் மூலம் அது இருக்கும் வட்டாரத்தில் ‘சல்பர்’ கனிமம் இருப்பது சந்தேகம் இன்றி நிருபிக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் அலுமியம், கேல்சியம், இரும்பு, குரோமியம், தைத்தேனியம் போன்ற கனிமங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.