கோலாலம்பூர், பிப் 25 – இன்று காலையில் வட சுமத்திராவில் நில நடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அதன் அதிர்வு நாட்டின் பல இடங்களில் உணரப்பட்டது இதனை தொடர்ந்து நாடு தழுவிய நிலையில் தீயணைப்பு மீட்புத்துறை 74 அவசர அழைப்புக்களை பெற்றது.
உயரமான கட்டிடங்களில் குடியிருந்தவர்கள் மற்றும் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அதிர்வை உணர்ந்ததைத் தொடர்ந்து விளக்கம் பெறுவதற்காக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கு அவசரமாக அழைத்ததாக தெரிகிறது.
கோலாலம்பூரிலிருந்து மட்டும் 21 அழைப்புகளும், புத்ரா ஜெயாவிலிருந்து 16 அழைப்புகளும், சிலாங்கூரிலிருந்து 16 அழைப்புகளும், நெகிரி செம்பிலானிலிருந்து 10 அழைப்புகளும் பெற்றதாக தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவின் இயக்குனர் டத்தோ நோர் ஹிஷாம் முகமட் தெரிவித்தார்.