
லண்டன், செப்டம்பர் 5 – நிஷிமுரா எனும் வால் நட்சத்திரத்தை இம்மாதம் 12-ஆம் தேதி, உலக மக்கள் நேரடியாக கண்டு இரசிக்கலாம்.
கடந்த ஆகஸ்ட்டில் முதல் முறையாக அடையாளம் காணப்பட்ட அந்த வால் நட்சத்திரம், அடுத்த வாரம் செவ்வாய்கிழமை, விடியலுக்கு சற்று முன் அல்லது சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு பூமிக்கு மிக அருகில் நெருங்கி வரும்.
நிஷிமுரா வால் நட்சத்திரம், மணிக்கு மூன்று லட்சத்து 86 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் ஆற்றல் கொண்டது.
அதனை, தொலைநோக்கி உட்பட இதர கருவிகள் இன்றி, மக்கள் நேரடியாக கண்டு இரசிக்கலாம்.
குறிப்பாக, நிலவு அல்லது வீனஸை நோக்கி கிழக்கு – வடகிழக்கு திசையில் பார்வையாளர்கள் பார்க்க வேண்டும்.