
குவந்தான், மார்ச் 14 – பகாங், மெந்தகாப்பில், தங்கும் விடுதியின் நீச்சள் குளத்தில் மூழ்கி 11 வயது சிறுவன் உயிரிழந்தான்.
முன்னதாக அந்த சிறுவனை, அவனது தாயாரின் காதலன் , அந்த தங்கும் விடுதிக்கு சுற்றிப் பார்க்க அழைத்து சென்றதாக , தெமர்லோ மாவட்ட போலீஸ் தலைவர் எ.சி.பி முஹமட் அசார் மொஹமட் யூசோஃப் (ACP Mohd Azhar Mohd Yusoff) தெரிவித்தார்.
சம்பவத்தின் போது, நீச்சல் குளத்துக்கு அருகில் அந்த ஆடவன் கைபேசியில் மூழ்கியிருந்தபோது, அச்சிறுவன் காணாமல் போனதாக , தொடக்க விசாரணையில் தெரிய வந்தது.
சிறுவன் காணாமல் போனதை அடுத்து, அவனைத் தேடுவதற்காக அந்த ஆடவன் அங்கிருந்த பாதுகாவலரின் உதவியை நாடியுள்ளான்.
பின்னர், அந்த சிறுவன் நீச்சல் குளத்தின் அடியில் சுயநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக, Mohd Azhar தெரிவித்தார்.
அவசர உதவி வழங்கப்பட்ட அந்த சிறுவன் பின்னர் மருத்துவமனையில் இறந்து விட்டது உறுதி செய்யப்பட்டதாக அவர் கூறினார்.