
அண்மைய சில காலமாக நாட்டில் நீடிக்கும் வெப்பத்தால், டுரியான் பழங்களுக்கான தேவை மட்டும் குறையவில்லை, மாறாக அதன் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு டுரியான் விளைச்சல் 30 விழுக்காடு வரை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பருவம் தொடங்கிய போது, டுரியான் மரங்களில் பூ மொட்டுகள் அதிகம் காணப்பட்டன. எனினும், அதீத வெப்பத்தால் அவை உதிர்ந்து போனதாக, விவசாயிகள் சிலர் தெரிவித்தனர்.
அதோடு, வெப்ப காலத்தில் மக்கள் டுரியான் பழங்களை உண்பதும் குறைந்துள்ளது. அதனால், கடந்த இரு வாரங்களில், பழங்களின் அரசனான டுரியானின் விலை 50 விழுக்காடு வரையில் சரிவு கண்டுள்ளது.
இரு வாரங்களுக்கு முன், ஒரு கிலோ மூசாங் கிங் டுரியான் 75 டிங்கிட்டிற்கு விற்கப்பட்ட வேளை ; தற்போது அது 50 ரிங்கிட்டுக்கு சரிந்துள்ளது.
இவ்வாண்டின் டுரியான் பருவம் தொடங்கி மூன்று வாரங்கள் மட்டுமே ஆகும் நிலையில், பருவ இறுதியில் லாபம் கிட்டுமா? இழப்பை எதிர்கொள்ள நேரிடுமா? என்பது தெரியாமல் டுரியான் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.