
சென்னை,செப் 8 – தமிழகத்தில் அம்பத்தூரில் நீட் தேர்வில் தோல்வி கண்ட 19 வயது இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. தேர்வு முடிவு வெளியான சில மணி நேரங்களுக்குப் பின் அப்பெண் தனது உயிரை மாய்த்துக்கொண்டார். கடந்த ஜூலை மாதம் தேர்வு எழுதுவதற்கு முன்னதாகவே தமிழ் நாடு அரியலுரில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு மிகவும் கடுமையாக இருக்கும் என்பதால் தேர்ச்சி பெறுவதில் சிரமம் என்பதை உணர்ந்து தற்கொலை செய்துகொள்வதாக அந்த பெண் தனது அறையில் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.