Latestமலேசியா

கற்பழிப்பு கொலைக்காக ஐ.நா அகதிகள் ஆணைக்குழு கார்டு பெற்றவர்கள் தடுத்துவைப்பு – சைபுடின் தகவல்

கோலாலம்பூர், மார்ச் 12 – நாடு முழுவதும் உள்ள தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஐ.நா அகதிகளுக்கான ஆணைக்குழுவின் கார்டு பெற்றவர்கள் கற்பழிப்பு , கொலை முதல் அரிய மண் திருட்டு போன்ற குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சர் சைபுத்தீன் நஸ்ஜூதின் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

UNHCR அட்டையை கொண்டிருப்போர் பொதுவாக குற்றங்களுக்கான அவர்களது சிறைத்தண்டனையை அனுபவிக்க குடிநுழைவு தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்படுகின்றனர். கொலை மற்றும் கற்பழிப்பு தவிர, சிலர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் கெடாவின் சிக் பகுதியில் அரிய மண் வகையை திருடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சைபுத்தீன் நஸ்ஜூதின் இஸ்மாயில் கூறினார்.

இந்த கைதிகளில் சிலர் தண்டனை காலத்தை முடித்துவிட்ட போதிலும் அவர்கள் செல்வதற்கு வேறு இடமில்லை என்பதால் அவர்களை நாங்கள் தடுப்பு முகாம்களில் வைத்திருக்கிறோம். அதே வேளையில் அகதிகளுக்கான ஐ.நா ஆணைக்குழு UNHCR எங்களுக்கு எழுதினால், நாங்கள் அவர்களை விடுவிப்போம்.

அகதிகளை பதிவு செய்து வேறு இடங்களில் குடியமர்த்துவது இவர்களின் வேலை. அவர்கள் இங்கு நீண்ட காலம் தங்க முடியாது என்று பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் கேள்விக்கு பதில் அளித்தபோது சைபுத்தீன் நஸ்ஜூதின் இஸ்மாயில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!