Latestஉலகம்

நீண்ட காலம் பாராசிட்டமால் உட்கொள்வதால் மாரடைப்பு அபாயம்

லண்டன், பிப் 9 – உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் , மருத்துவ ஆலோசனையின்படி நீண்ட காலத்திற்கு பாராசிட்டமால் (Paracetamol) மருந்தை உட்கொண்டு வந்தால் , அவர்களுக்கு மாரடைப்பு , பக்கவாதம் போன்ற உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாக, ஆய்வொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல மாதங்களாக ஒரு நோயாளி paracetamol மருந்தை எடுப்பதில் இருக்கும் ஆபத்தினையும் நன்மையினையும் மருத்துவர்கள் சீர் தூக்கிப் பார்க்க வேண்டுமென , பிரிட்டன் எடின்பெர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். தலைவலிக்கும் காய்ச்சலுக்கும் வலி நிவாரணி மருந்தை எடுப்பது பாதுகாப்பானது எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!