
புத்ரா ஜெயா, ஜன 26 – ஐந்து ஆண்டு காலத்திற்கும் கூடுதலாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் மேல்முறையீடு செய்வதற்கு சிறைச்சாலைத்துறை உதவ வேண்டும் என மேல் முறையீடு நீதிமன்ற நீதிபதி கமாலுடின் சைட் ஆலோசனை தெரிவித்துள்ளார். இந்த பிரிவைச் சேர்ந்த கைதிகள் உயர் நீதிமன்றங்களில் முறையீடு செய்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார். எந்தவொரு வழக்கறிஞரும் இத்தகைய கைதிகளின் மேல் முறையீட்டிற்கு உதவ முனவர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். கற்பழிப்பு குற்றத்திற்காக 25ஆண்டு சிறை மற்றும் மூன்று பிரம்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ள 34 வயதுடைய ஆடவர் மேல் முறையீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும்படி செய்துகொண்ட மனுவை தள்ளுபடி செய்தபோது நீதிபதி கமாலுடின் இதனை தெரிவித்தார்.