
கோலாலம்பூர், ஜன 31 – மக்கள் ஒன்று கூடுவதற்கான உரிமையும் சுதந்திரமும் இன்னும் பராமரிக்கப்படுகிறது. ஆனால் பொது பாதுகாப்பு மற்றும் ஒழுங்கைப் பேணுவதற்கான தேவையை சீராக்குவதற்கு நியாயமான விதிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அண்மையில் தலைநகரில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான பேரணியைத் தடுத்ததாகக் கூறப்படும் விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் (Dato sri Saifudin) இந்த விளக்கத்தை தெரிவித்தார். கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள ஒன்றுகூடும் சுதந்திரத்தைப் பற்றி அரசாங்கம் ஒருபோதும் அலைகழிக்கவில்லை.
ஒன்று கூடும் சுதந்திரத்திற்கான உத்தரவாதம் தொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்து 10 (1) (பி)யில் குறிப்பிடப்பட்டுள்ளபடி சுதந்திரமாக கூடுவதை நிலைநிறுத்தும் கடப்பாட்டை இன்றைய அரசாங்கம் கொண்டுள்ளது. இதனை அரசாங்கம் நிச்சயமாக பாதுகாக்கும். அதே நேரத்தில்,கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்து 10 (2) (பி) தொடர்பான தேசிய பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு ஒழுங்கின் நியாயமான கட்டுப்பாடுகளை அரசாங்கம் செயல்படுத்த முடியும் என்று கூறுகிறது. அதனால்தான் இந்த இரண்டு விவகாரங்களையும் ஒன்றாகப் படிக்க வேண்டும் என சைபுடின் (Saifuddin) வலியுறுத்தினார்.