
கோலாலம்பூர், மார்ச் 8 – JAC எனப்படும் நீதித்துறை நியமனங்கள் ஆணைய உறுப்பினராக கூட்டரசு நீதிமன்ற நீதிபதி நளினி பத்மநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நியமித்துள்ள நீதித்துறை நியமனங்கள் ஆணைய உறுப்பினர்களின் பெயர் பட்டியலில் நளினியும் இடம்பெற்றுள்ளார். நீதிபதிகளை நியமிக்கும் மற்றும் அவர்களுக்களின் பதவி உயர்வுக்கான பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு முன்மொழியும் பணிகளை JAC கொண்டுள்ளது. அந்த ஆணையத்தின் உறுப்பினர்களில் ஒருவராக இருந்த நீதிபதி Zabidin Diah மலாயா தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து 63 வயது நளிளி நீதித்துறை நியமனங்கள் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.