Latestமலேசியா

புருவாஸ் எம்.பி வீட்டில் வீசப்பட்ட மொலோடோவ் காக்டெயிலில் பெட்ரோல் இருந்தது

ஈப்போ, ஜன 22 -அயேர் தாவாரில் புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ங்கே கூ ஹாம் வீட்டில் வீசப்பட்ட மொலோடோவ் காக்டெயிலில் பெட்ரோல் இருந்ததாக பேரா போலீஸ் தலைவர் முகமட் யூஸ்ரி ஹசன் பஸ்ரி தெரிவித்திருக்கிறார். தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை ஜனவரி 18ஆம் தேதி இதனை உறுதிப்படுத்தியது. அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கை விரைவில் போலீசிற்கு அனுப்பிவைக்கப்படும் என முகமட் யூஸ்ரி கூறினார்.

குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் 14 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும். குற்றவியல் சட்டத்தின் 435 ஆவது விதியின் கீழ் அந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதோடு இதுவரை 11 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர் . இந்த சம்பவம் தொடர்பாக மேல்விவரங்கள் தெரிந்த பொதுமக்கள் விசாரணை அதிகாரி ASP முகமட் அசலானுடன் தொடர்புகொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டார். அந்த தீவைப்பு சம்பவத்தில் ங்கேயின் காரும் அவரது இரண்டு வாகனங்களும் அழிந்தன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!