Latestஉலகம்

நீதிமன்றத்தில் கணவரால் கழுத்து அறுக்கப்பட்டு மனைவி மரணம்

பெங்களூரு, ஆக 16 – கருத்து வேறுபாடுகளை தீர்த்துக்கொண்டு ஏழு ஆண்டு கால திருமண பந்தத்தை தொடர்வதற்கு இணக்கம் தெரிவித்த கணவர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்தார். விவகாரத்து செய்துகொள்வதற்காக மனுத் தாக்கல் செய்திருந்த அத்தம்பதியர் குடும்ப நீதிமன்றத்தில் நடைபெற்ற கவுன்சிலிங் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் அவ்விருவரும் வெளியே வந்தனர். அதன் பிறகு தமது மனைவி சித்ரா முகம் கழுவ குளியல் அறைக்கு சென்றபோது அவரை பின்தொடர்ந்து சென்ற கணவர் சிவகுமார் இந்த தாக்குதலை நடத்தினார்.

உடனடியாக சிவக்குமார் அங்கிருந்து தப்பியோட முயன்றார். எனினும் அருகிருந்தவர்கள் அவரை வளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மருத்துவமனை கொண்டுச் செல்லப்பட்ட சித்ரா சிகிச்சையின்போது இறந்தார். கழுத்தில் ஆழமாக வெட்டப்பட்டதால் இரத்தம் அதிகமாக வெளியேறியதால் அவர் இறந்தார். இதனிடையே அவரது கணவர் நீதிமன்றத்திற்குள் எப்படி கத்தியுடன் நுழைந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!