கோலாலம்பூர், பிப் 10 – MACC யின் தலைமை ஆணையர் Azam Baki பங்குகளை வாங்கியிருப்பதாக அம்பலப்படுத்திய Lalitha kunaratnam நீதிமன்றத்தில் பொய் சொன்னதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. (சி4) எனப்படும் ஊழல் மற்றும் வேண்டியவர்களுக்கு சலுகை காட்டுவதை தடுக்கும் அமைப்பின் ஆராய்ச்சியாளராக தாம் செயல்படுவதாக அவர் பொய்யான தகவலை தெரிவித்துள்ளார் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Azam Baki தொடுத்துள்ள அவதூறு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள தற்காப்பு வழக்கு மனு அறிக்கையில் லலிதா குணரத்னம் பொய்யான தகவலை சமர்ப்பித்துள்ளதாக அவருக்கு எதிராக நேற்று மாலை மணி 3.43 அளவில் Sentul போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதை Sentul மாவட்ட போலீஸ் தலைவர் Beh Eng lai உறுதிப்படுத்தியதாக இணையத்தள பதிவேடு ஒன்று தகவல் வெளியிட்டது.
Related Articles
Check Also
Close
-
சுங்கை பூலோ சிறையில் கைதிகள் நெரிசல்2 hours ago