
மலாக்கா, செப் 20 – Air Keroh விலுள்ள மலாக்கா நீதிமன்ற வளாகத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த பாதுகாவலர் அதிகாரி ஒருவருக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்தோடு 3,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. நீதிமன்ற கட்டிடத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்ததோடு அங்கிருந்த பணம் செலுத்தும் முகப்பிடத்தில் 150 ரிங்கிட்டை திருடிய குற்றத்தை P. Paul Agilan ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து இந்த தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் மொழிபெயர்ப்பாளர் குற்றச்சாட்டை தமிழ் மொழியில் வாசித்தபோது அதனை புரிந்துகொண்டதற்கு அடையாளமாக Paul Agilan தலையசைத்தார்.
செப்டம்பர் 2 ஆம் தேதி பின்னிரவு 12.01 மணியளவில் மலாக்கா தெங்கா விலுள்ள மலாக்கா நீதிமன்ற வளாகத்தில் பணத்தை திருடிய குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் மலாக்கா நீதிமன்ற வளாகத்தின் அலுவலகத்தில் புகுந்து அங்கிருந்து மேலும் 800 ரிங்கிட்டை திருடியதாகவும்
Paul Agilan மீது மற்றொரு குற்றஞ்சாட்டு கொண்டுவரப்பட்டது. இரண்டாவது குற்றத்திற்கு அவருக்கு ஆறு மாதம் சிறை மற்றும் 2,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த சிறைத்தண்டனையை ஏகாகாலத்தில் அனுபவிக்கும்படி Paul Agilan னுக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.