
புத்ரா ஜெயா , ஜன 15 – கூடுதல் கட்டளை தொடர்பில் எந்தவொரு தரப்பினரும் விவாதிப்பதை தடுப்பதற்கு நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெறுவதற்காக விண்ணப்பிக்கும்படி சட்டத்துறை தலைவர் அலுவகத்திற்கு அமைச்சரவை உத்தரவு எதனையும் பிறப்பிக்கவில்லை.
இன்று காலை இரண்டாவது துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ படில்லா யூசோப் (Datuk Seri Fadillah Yusof) தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து எதுவும் எழுப்பப்படவில்லையென தொடர்பு அமைச்சர் பாமி பாட்ஷில் ( Fahmi Fadzil) தெரிவிவித்தார்.
கூடுதல் கட்டளை குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படவோ அல்லது நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெறுவதற்கு மனு செய்யும்படி சட்டத்துறை தலைவர் துறைக்கு அமைச்சரவை உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லையென இன்று தனது அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் Fahmi கூறினார்.
ஆட்சியாளர்கள், சமயம் மற்றும் இனம் தொடர்பான உணர்ச்சிகரமான விவகாரத்தை இது கொண்டிருப்பதால் அரச அமைப்பை பாதுகாப்பதற்கு தடையுத்தரவுக்காக நிதிமன்றத்தில் மனு செய்யப்படுவதற்கு காரணம் என திங்கட்கிழமையன்று கூட்டரசின் மூத்த வழக்கறிஞர் சம்சுல் போல்ஹசான் ( Shamsul Bolhassan) கூறியதாக வெளியான தகவல் குறித்து பாமியிடம் (Fahmi) செய்தியாளர்கள் வினவினர்.