Latestமலேசியா

நீதிமன்ற வளாகத்தில் SOP மீறல்; ஸம்ரி வினோத் உட்பட பலர் மீது விசாரணை

கோலாலம்பூர், பிப் 22 – தனித்து வாழும் தாய் Loh Siew Hong கின் வயதுக் குறைந்த பிள்ளைகள் ஒருதலைப்பட்சமாக மதமாற்றம் செய்யப்பட்டதற்கு தங்களது ஒருமைப்பாட்டை தெரிவிப்தற்காக கோலாலம்பூர் உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நடைபெற்ற ஆட்சேப கூட்டத்தில் கலந்துகொண்ட தனிப்பட்ட நபர்கள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் , மற்றும் சில இஸ்லாமிய அரசு சார்பற்ற இயக்கங்கள் SOP விதிமுறையை மீறியிருக்கின்றனரா என்பது குறித்து போலீஸ் விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

பெர்லீசில் மதம் மாற்றப்பட்ட பிள்ளைகளுக்கு தங்களது ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் வகையில் நேற்று காலையில் நடைபெற்ற அந்த பேரணி தேசிய கவனத்தை ஈர்த்தாக Gerakan Pembela Ummah அதன் முகநூலில் தெரிவித்துள்ளது.

உம்மா இயக்கத்தை தவிர்த்து Pembela. Berjasa, putra மற்றும் Perkasa ஆகியவற்றின் பிரதிநிதிகளோடு சர்ச்சைக்குரிய இஸ்லாமிய சமய போதகர் Zamri vinoth kalimuthu ஆகியோரும் நீதிமன்ற வளாகத்தில் உரையாற்றினர்.

எனினும் அந்த கூட்டத்தில் கந்துகொண்ட அவர்கள் அனைவரும் கோவிட் தொற்றுக்கான SOP விதிமுறையை மீறியதால் அந்த குழுவினர் மற்றும் தனிப்பட்ட சில நபர்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக செந்தூல் போலீஸ் தலைவர் Beh Eng lai உறுதிப்படுத்தினார்.

Loh Siew Hong கின் ஹேபியர்ஸ் கோர்ப்பஸ் மனு மீதான விசாரணை நடைபெற்றபோது அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் வகையில் அவர்கள் கூடினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!