Latestமலேசியா

நீதிமன்ற வழக்கைக் கைவிடுமாறு அன்வாரிடம் கோரினேனா? சுத்தப் பொய் என்கிறார் நஜீப்!

பிரதமராவதற்கு ஆதரவளிக்க வேண்டுமானால், தமக்கெதிரான நீதிமன்ற வழக்கைக் கைவிடுமாறு தாம் கோரியதாக, பிகேஆர் (PKR) தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கும் குற்றச்சாட்டை முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மறுத்துள்ளார்.

தமது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, நீதிமன்ற வழக்குகளைக் கைவிடும்படி கோரி, தாம் இதுவரை யாரிடமும் போய் நின்றதில்லை என டத்தோஸ்ரீ நஜீப் திட்டவட்டமாகக் கூறினார்.

டத்தோஸ்ரீ அன்வார் கூறியிருப்பதில் கடுகளவும் உண்மையில்லை. நீதிமன்ற வழக்கைக் கைவிடும்படி தாம் கேட்டதாக அன்வார் கூறியிருப்பது, உண்மையிலேயே விந்தையாக இருப்பதாக பெக்கான் (Pekan) நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ நஜீப் தெரிவித்தார்.

“120 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தமக்கிருப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் கூறியது உண்மையாக இருந்திருந்தால், ஏன் இஸ்தானா நெகாரா அவரைப் பிரதமராக நியமிக்கவில்லை? நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் ஆதரவை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏன் ஏற்பட வேண்டும்?” என்றும் டத்தோஸ்ரீ நஜீப் முகநூல் பதிவின் மூலம் கேள்வி எழுப்பினார்.

நஜீப் உட்பட அம்னோ தலைவர்கள் மீதான நீதிமன்ற வழக்குகளைத் தாம் கைவிடாததால்தான், தாம் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என நேற்று டத்தோஸ்ரீ அன்வார் கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!