
மலாவி, மே 17 – மலாவியிலுள்ள, மிகப் பெரிய Shire நதியை கடக்க பயன்படுத்தப்படும் படகை, நீர் யானை ஒன்று திடீரென தாக்கியதில், ஒரு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
சம்பவத்தின் போது அந்த படகில் இருந்த 14 பேர் நீந்தி கரை சேர்ந்த வேளை; காணாமல் போன இதர 23 பேரை தேடும் பணிகள் தொடர்கின்றன.
கடந்த திங்கட்கிழமை நிகழ்ந்த அச்சம்பவத்தில், காணாமல் போனவர்களை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்பு மிக குறைவு என கூறப்படுகிறது.
கிராம மக்கள், வழக்கம் போல தங்கள் விளை நிலங்களில் வேலை செய்வதற்காக படகில் ஏறி ஆற்றை கடக்க முற்பட்ட போது அச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.