
சிலாங்கூர், செளஜனா புத்ராவிலுள்ள, நீர் விளையாட்டு மையத்திற்கு சென்ற பெண் ஒருவரிடம், அங்கு பணியில் இருந்த பாதுகாவலர் ஆபாசமாக நடந்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், போலீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது.
இம்மாதம் 13-ஆம் தேதி, காலை மணி 10.30 வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்த வேளை ; 18-ஆம் தேதி, 28 வயது உள்நாட்டு பெண் ஒருவர் அது தொடர்பில் கின்ராரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததை, குவாலா லங்காட் போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் அஹ்மட் ரிட்வான் முஹமட் நோர் உறுதிப்படுத்தினார்.
நீர் விளையாட்டு மையத்திலுள்ள, சருக்கு பலகை வாயிலாக, சருக்கி வந்து நீரில் விழுந்த அப்பெண்ணின் மார்பகத்தை, அங்கு பணியில் இருந்த இரு பாதுகாவலர்களில் ஒருவன் தடவிச் சென்றதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த புகார் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 354-வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் பத்தாண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது பிரம்படிகள் விதிக்கப்படலாம்.