Latestமலேசியா

நீலாயில் உணவகத்திள் நுழைந்து நால்வரை பாராக் கத்தியால் வெட்டிய முகமூடி கும்பல்

நீலாய், ஜனவரி-10, நெகிரி செம்பிலான், நீலாயில் உணவகமொன்றில் நுழைந்த முகமூடி கும்பல் பாராங் கத்தியால் வெட்டியதில் நால்வர் காயமடைந்தனர்.

நேற்றிரவு 9.40 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உள்ளூர் ஆடவர்கள் என நம்பப்படும் ஐவர் காரில் வந்திறங்குவது CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.

வந்தவர்கள், உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சில ஆடவர்களை நெருங்கி பாராங் கத்தியால் சரமாரியாகத் தாக்கினர்.

அதில் 44 வயது முதல் 59 வயதிலான 4 ஆடவர்கள் காயமடைந்து, சிரம்பான் துவாங்கு ஜஃபார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடென்டண்ட் அப்துல் மாலிக் ஹசிம் (Abdul Malik Hasim) கூறினார்.

தாக்குதலுக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஆயுதத்தைக் கொண்டு கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றவியல் சட்டத்தின் 148-வது பிரிவின் கீழும், ஆயுதத்தால் படுகாயம் ஏற்படுத்தியதாக அதே சட்டத்தின் 326-வது பிரிவிலும் கீழும் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.

தாக்குதல் நடத்தி விட்டு தப்பியோடியவர்களை கண்டுபிடிக்க, சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளின் உதவியையும் போலீஸ் நாடியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!