
கோலாலம்பூர், அக்டோபர் 3 – இன்று காலை மணி ஒன்பது நிலவரப்படி, பெட்டாலிங் ஜெயா, செராஸ், பந்திங், நீலாய், மற்றும் சிரம்பான் ஆகிய ஐந்து பகுதிகளில், காற்று தூய்மைக்கேட்டு குறியீடு, 101-க்கும் கூடுதலாக ஆரோக்கியமற்ற நிலையில் பதிவுச் செய்யப்பட்டது.
குறிப்பாக, நெகிரி செம்பிலான், நீலாயில், காற்று தூய்மைக்கேட்டு குறியீடு மிக மோசமாக 156-ஆக பதிவானது.
அதனை அடுத்து, செராஸில் 154-ஆகவும், சிரம்பானில் 142-ஆகவும், பந்திங்கில் 119-ஆகவும், பெட்டாலிங் ஜெயாவில் 109-ஆகவும் அடையாளம் காணப்பட்டது.
நாடு முழுவதும் 60 பகுதிகளில், காற்றின் தூய்மைக்கேட்டு குறியீடு, 51 முதல் 100 வரையில், மிதமான நிலையில் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
அவை, பஹாங், பேராக், சபா, சரவாக் ஆகிய மாநிலங்களிலுள்ள சில பகுதிகள் ஆகும்.
இவ்வேளையில், சபா, கிமானிஸ், கெடா, லங்காவி, பெர்லீஸ், கங்கார் ஆகிய மூன்று இடங்களில் மட்டும், காற்று தூய்மைக்கேட்டு குறியீடு, 0-50 வரையில் ஆரோக்கியமான நிலையில் பதிவாகியுள்ளது