Latestமலேசியா

நுருல் இஷா மறுமணம் செய்து கொண்டார்

கோலாலம்பூர், ஆக 6 – கடந்த ஏழு ஆண்டு காலம் தனித்து வாழும் தாயாக இருந்த பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவரும் Permatang Pauh நாடாளுமன்ற உறுப்பினருமான Nurul Izzah Anwar, நேற்றிரவு Khazanah ஆராய்ச்சிக் கழகத்தின் விசாரணையாளர் Yin Shao Loong-கை திருமணம் செய்து கொண்டார். தாங்கள் திருமணம் செய்து கொண்டதை நேற்றிரவு அந்த தம்பதியர் அறிவித்தனர்.

Nurul Izzah Anwar-ரின் முகநூல் சமூக வலைத்தளத்திலும் அவர்கள் தங்களது திருமணம் குறித்த தகவலை பதிவிட்டிருந்தனர். பி.கே.ஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் Datuk Sri டாக்டர் Wan Azizah-வின் மூத்த புதல்வியான Nurul Izzah இதற்கு முன் Raja Ahmad Sharir Iskandar Raja Salim-மை திருமணம் செய்து கொண்டார். எனினும் 2015ஆம் ஆண்டு அவர்கள் மணவிலக்கு பெற்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!