நெகிரி செம்பிலான், ஆகஸ்ட் 12 – நெகிரி செம்பிலானில் மலைப்பகுதிகள் மற்றும் மலைச் சரிவுகளில் செயல்படும் சுமார் 50 தங்கும் விடுதிகள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன. அவைகளின் பாதுகாப்பு நிலை குறித்து அச்சம் ஏற்பட்டிருப்பதாக நெகிரி ஸெம்பிலன் மாநில உள்ளாட்சி மேம்பாடு, வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து குழுவின் தலைவர் அருள் குமார் தெரிவித்திருக்கிறார்.
இது சுற்றுப்பயணிகளுக்கு ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போதைய வானிலை காரணமாக அனுமதி இன்றி மலை சரிவுகளில் கட்டப்பட்டுள்ள இந்த தங்கும்விடுதிகள் தங்குவதற்கு ஆபத்தானவை.
முன்னதாக அனுமதியின்றி செயல்படும் அனைத்து தங்கும் விடுதிகளின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி அவை அனுமதியுடன் செயல்பட நெகிரி செம்பிலான் அரசு இணக்கம் கண்டதாக அருள் கூறினார்.
அத்தங்கும் விடுதிகளுக்குச் செல்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக நீலாய் சட்டமன்ற உறுப்பினருமான அருள் தெரிவித்தார்.