Latestமலேசியா

நெகிரி செம்பிலானில் மாறுபட்ட சமய வழிபாட்டு முறையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது

கோலாலம்பூர், ஜூலை 11 – நெகிரி செம்பிலானில் ஒரு திருமணமான தம்பதியும் அவர்களது 16 வயது மகனும் மாறுபட்ட சமய வழிபாட்டு முறையை பின்பற்றியதற்காக கைது செய்யப்பட்டனர். அவர்கள் 2019 ஆம் ஆண்டு முதல் மாறுபட்ட மில்லா ஆபிரகாம் ( Millah Abraham ) பிரிவை பின்பற்றுவதாக நெகிரி செம்பிலான் இஸ்லாமிய சமய விவகாரத் துறையின் அமலாக்கப் துறையின் நடவடிக்கை பிரிவின் தலைவர் அகமட் ஸாக்கி ஹம்சா ( Ahmad Zaki Hamzah ) தெரிவித்தார். அந்த தம்பதியர் சுமார் 40 வயதைக் கொண்டவர்கள் என்பதோடு அவர்களது மகன் மகன் பள்ளிக்கு செல்லவில்லை என்றும் கூறப்பட்டது .

அந்த தம்பதியும் அவர்களது மகனும் தம்பினில் , பெல்டா Sungai Kelamah வில் நேற்று மாலை மணி ஆறு அளவில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கடந்த ஆறு மாத காலமாக பெல்டா குடியிருப்பு பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருவதோடு அவர்களது மகன் பெல்டா பாலோங் 3 இல் உள்ள அவர்களது சொந்த வீட்டில் தங்கியிருந்தான். மடிக்கணினி , கையடக்க கணினி மற்றும் கை தொலைபேசிகளும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த ஒரு ஆண்டு காலமாக அந்த குடும்பத்தினர் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் மக்களிடையே மாறுபட்ட சமய போதனையை பரப்பி வந்துள்ளதாக அகமட் ஸாக்கி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!