Latestமலேசியா

நெகிரி செம்பிலான் அரசாங்கத்தை அமைக்க 19 தொகுதிகளை கைப்பற்ற பெரிக்காத்தான் நேசனல் இலக்கு

கோலாலம்பூர், மே 23 – எதிர்வரும் நெகிரி செம்பிலான் சட்டமன்ற தேர்தலில் அம்மாநிலத்திலுள்ள 36 தொகுதிகளில் குறைந்த பட்சம் 19 இடங்களை பெறும் இலக்கை பெரிக்காத்தான் நேசனல் கொண்டுள்ளது. மேலும் வெற்றிபெறக்கூடிய தொகுதிகளையும் பெரிக்காத்தான் நேசனல் அடையாளம் கண்டுள்ளதாக அதன் மாநில தலைவரான Eddin Syazlee Shith தெரிவித்தார். பெரும்பான்மை தொகுதிகளை பெர்சத்து கொண்டிருக்கும் என்பதோடு பாஸ் மற்றும் கெராக்கான் கட்சிக்கு தேவையான தொகுதிகளை நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கும் என அவர் கூறினார். பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியின் தலைவர் என்ற முறையில் பெர்சத்து கூடுதல் தொகுதிகளை கொண்டிருக்கும். எனினும் பாஸ் மற்றும் கெராக்கான் கட்சிகளைவிட பெரிய அளவில் பெர்சத்து தொகுதிகளை எடுத்துக்கொள்ளாது என்றும் அவர் தெரிவித்தார். எதிர்வரும் ஜூலை அல்லது ஆகஸ்டு மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நெகிரி செம்பிலான் மாநில தேர்தலை எதிர்நோக்குவதற்கு பெரிக்காத்தான் நேசனல் தயாராய் இருப்பதாக Eddin Syazlee Shith கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!