சிரம்பான், பிப் 17- நெகிரி செம்பிலானில் உள்ள சிறார் பராமரிப்பு இல்லத்தில் இருந்து சிறார்களைக் கடத்த முயன்றதாக எந்தவொரு புகாரையும் பெறவில்லை என அம்மாநில போலீஸ் கூறியுள்ளது.
முன்னதாக, சிறார்களை கடத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறி, negeri Sembilan எனும் பெயர் கொண்ட முகநூல் பக்கத்தில் காணொளி ஒன்று பகிரப்பட்டிருந்தது.
அந்த சம்பவத்தை மாநில போலீசார் விசாரித்தனர். மேலும் அதுபோன்ற புகார் நெகிரி செம்பிலானின் எந்தவொரு மாவட்ட போலீஸ் நிலையத்திலும் பெறப்படவில்லை என, நெகிரி செம்பிலான் மாவட்ட குற்றப் புலனாய்வு துறை தலைவர் Muhamamd Izzudin Runggai தெரிவித்தார்.
அப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருந்தால் அது நெகிரி செம்பிலானில் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என அவர் குறிப்பிட்டார்.