சிரம்பான்,பிப் 24 – நெகிரி செம்பிலான் மெந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமினுடின் ஹருனுக்கு (Datuk Seri Aminuddin Harun ) கோவிட் தொற்று கண்டுள்ளது.
அறிக்கையின் வாயிலாக அந்த தகவலை அவரது அலுவலகம் உறுதிப்படுத்திய வேளை, சுகாதார அமைச்சின் SOP -யின் படி மெந்திரிபெசார் தம்மை தனிமைப் படுத்திக் கொண்டிருப்பதாகக் கூறியது.
தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் காலத்தில், ஏற்புடைய சில அலுவல் பணிகளை அவர் தொடர்ந்து கண்காணித்து வருவார் எனவும் அந்த அலுவலகம் குறிப்பிட்டது.