Latestமலேசியா

நெகிரி செம்பிலான் DAP துணைத்தலைவர் கேசவதாஸ் நாயர் உட்பட இருவர் செனட்டர்களாக பதவி உறுதி மொழி

கோலாலம்பூர்., ஏப் 25 – கிளந்தான் அமனோ துணைத் தலைவர் Mohamad Fatmi Che Salleh மற்றும் நெகிரி செம்பிலான் மாநில DAP உதவித் தலைவர்
A.Kesavadas Nair ஆகியோர் மேலவை உறுப்பினர்களாக இன்று பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இன்று தொடங்கி 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம்தேதிவரை Fatmi யை மேலவை உறுப்பினராக பேரரசர் நியமித்துள்ளார். நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சார்பில் இரண்டாவது தவணையாக கேசவதாஸ் நாயர் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று டேவான் நெகாராவில் மேலவை தலைவர் டாக்டர் ராய்ஸ் யாத்திம் முன்னிலையில் அந்த இரு செனட்டர்களும் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நாடாமன்றத்தின் சீரமைப்புக்கான முயற்சிகளில் ஆக்கப்பூர்வமாகவும் பொறுப்புணர்வோடும் அந்த இரண்டு மேலவை உறுப்பினர்களும் செயல்பட வேண்டுமென டாக்டர் ராய்ஸ் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!