குவா மூசாங், ஆகஸ்ட்-18 – நேரடி போட்டி ஏற்பட்ட கிளந்தான் நெங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி (BN) வெற்றிப் பெற்று, அத்தொகுதியை மீண்டும் கைப்பற்றியுள்ளது.
BN வேட்பாளர் மொஹமட் அஸ்மாவி (Mohd Azmawi) 3,352 வாக்குகள் பெரும்பான்மையில் வாகை சூடி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அவருக்கு 9,091வாக்குகள் கிடைத்தன.
பாஸ் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு எளிதில் வெற்றிப் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட பெரிக்காத்தான் நேஷனல் (PN) வேட்பாளர் மொஹமட் ரிஸ்வாடி இஸ்மாயில் (Mohd Rizwadi Ismail) வெறும் 5,741 வாக்குகளைப் பெற்று தோல்வியுற்றார்.
தேசிய முன்னணிக்கு தொகுதி கைமாறியிருப்பதால், 45 இடங்களைக் கொண்ட கிளந்தான் சட்டமன்றத்தில் பாஸ் கட்சிக்கு ஓரிடம் குறைந்து 42 இடங்களும், தேசிய முன்னணி மற்றும் பக்காத்தான் ஹராப்பானை உள்ளடக்கிய எதிர்கட்சிகளின் பலம் 3-ராகவும் அதிகரித்துள்ளது.
நெங்கிரி சட்டமன்ற உறுப்பினராக இருந்த மொஹமட் அசிசி அபு நாயிம் (Mohd Azizi Abu Naim) பெர்சாத்து கட்சியின் உறுப்பியத்தை இழந்ததால், அத்தொகுதி தாலியானதாக ஜூன் 19-ல் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து புதிய சட்டமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதற்காக சனிக்கிழமை அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.