
புதுடில்லி, ஜூலை 5 – இந்தியாவில் நாகலந்து மாநிலத்தில் முக்கியமான நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது ராட்சத பாறை உருண்டு விழுந்ததில் அடுத்தடுத்து இரு கார்களில் மோதியதில் அக்கார்கள் சுக்கு நூறாக நொறுங்கிய காணொளி வைரலானது. இந்த சம்பவத்தில் இருவர் உயரிழந்தனர். நாகலாந்தில் திமாபூர் மற்றும் கோஹிமா மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது பெரிய பாறை மலைப்பகுதியிலிருந்து கீழே உருண்டது. அந்த சம்பவத்தில் கடுமையாக காயம் அடைந்த மூவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.