Latestமலேசியா

அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சரும் நோபல் பரிசு வென்றவமான ஹேன்ரி கிசிஞ்சர் காலமானார்

வாஷிங்டன், நவ 30 – அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும் பிரபல அரச தந்திரியும், நோபல் பரிசு பெற்றவருமான ஹேன்ரி கிசிஞ்சர் தமது 100ஆவது வயதில் காலமானார். அமெரிக்காவின் இரண்டு அதிபர்களின் கீழ் வெளியுறவு அமைச்சராக இருந்தபோது அமெரிக்க வெளியுறவு கொள்கையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவதிலும் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார். இவ்வாண்டு ஜூலையில் சீனாவுக்கு திடீர் வருகை புரிந்த அவர் சீன அதிபர் ஸி ஜின்பிங்கை சந்தித்தார்.

1974ஆம் ஆண்டு அதிபர் நிக்சன் பதவி விலகிய பிறகும் அதிபர் ஜெரால்ட் ஃபோர்டு பதவி காலத்திலும் தொடர்ந்து வெளியுறவு அமைச்சராக இருந்ததோடு 1970 ஆம் ஆண்டுகளில் உலகில் ஏற்பட்ட பல அரசியல் மாற்றங்களுக்கு அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் நிலையில் முக்கிய பங்காற்றியுள்ளார். சீனாவுடனான அமெரிக்க நட்புறவில் புதிய அத்தியாயம் தொடங்குவதற்கும் , அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனுக்கிடையே ஆயுதக் களைவு பேச்சுக்கள் நடைபெறுவதற்கும், இஸ்ரேல் மற்றும் அதன் அண்டை அரபு நாடுகளுடன் நட்புறவு ஏற்படுவதற்கும் வட வியட்னாம் மீதான அமைதி உடன்பாடு ஏற்படுவதற்கும் ஹேன்ரி கிசிஞ்சர் அமெரிக்க வெளியுறவு அமைச்சின் சிற்பியாக விளங்கினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!