ஜோர்ஜ் டவுன், ஜன 10 – பினாங்கு துரித நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் கடந்த மாதம் தகராறில் ஈடுபட்டதாக வாகன இழுவை நிறுவனங்களைச் சேர்ந்த எண்மர் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. Tan Cheng Hooi. தரணிதரன் அசோக்குமார், Lee Soon Aun. Surendren Subramaniyan, Lekkeswaran Nanthakumar . Shafar Megat Zanil , faiez Ahmad, Khoo Boo Aik, ஆகியோர் கலாவரத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டனர்.
ஜனவரி 26 ஆம் தேதி நண்பகல் மணி 2. 12 அளவில் தலைக்கவசனம், சங்கலி, பூட்டு ஆகியவற்றை பயன்படுத்தி ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு கொண்டதாக குற்றவியல் சட்டத்தின் 148ஆவது விதியின் கீழ் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. Tan,Lee, khoo மற்றும் Dharanitharan ஆகியோர் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர். அவர்களுக்கு 3,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. அதனை செலுத்தத் தவறினால் 3 மாத சிறைத் தண்டனையை அனுபவிக்கும்படி உத்தரவிடப்பட்டது. இதர நால்வர் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளவில்லை. அவர்களுக்கு 2,500ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டது.