கோலாலம்பூர், செப்டம்பர் -20, நெடுஞ்சாலையில் பந்தயத்தில் ஈடுபட்டு வைரலான காரோட்டிகளில் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருப்பதை, புக்கிட் அமான் போக்குவரத்து அமுலாக்கம் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறை உறுதிச் செய்துள்ளது.
தொடக்கக் கட்ட விசாரணையில், ‘அப்பந்தயம்’ வடக்குத் தெற்கு நெடுஞ்சாலையில் தெற்கு நோக்கிச் செல்லும் சாலையின் 48-வது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது கண்டறியப்பட்டது.
இரு கார்கள் பந்தயத்தில் ஈடுபடுவது போல் நெடுஞ்சாலையில் வேகமாகச் செல்லும் 36 வினாடி வீடியோ முன்னதாக வைரலானது.
ஆபத்தான முறையில் மற்ற வாகனங்களை முந்திச் செல்வதும், அவசரப் பாதையில் நுழைவதுமாக அவையிரண்டும் போய் கொண்டிருந்ததை அதில் காண முடிந்தது.