Latestமலேசியா

நெடுஞ்சாலை ரோந்து போலீசிடமிருந்து தப்பியோடிய கார் விபத்தில் சிக்கியது சிறுவன் உட்பட நால்வர் காயம்

சுபாங் ஜெயா, ஏப் 27 – வடக்கு – தெற்கு நெடுஞ்சாலை வாரிய ரோந்து போலீசாரிடமிருந்து தப்பியோடிய கார் ஒன்று இன்று விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த நான்கு வயது சிறுவன் உட்பட நால்வர் காயம் அடைந்தனர். அதிகாலை மணி 1.05 அளவில் Putra Heights க்கு அருகே புரோட்டோன் சத்ரியா கார் ஒன்று சந்தேகத்துடன் சென்று கொண்டிருந்ததைத் தொடர்ந்து அக்காரை நிறுத்தும்டி ரோந்து போலீசார் சைகை காட்டினர். இதனை அலட்சியம் செய்த அந்த காரின் ஓட்டுனர் அக்காரை வேகமா ஓட்டத் தொடங்கியவுடன் அதனை ரோந்து கார் துரத்திச் சென்றது. பின்னர் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் Seafield டோல் சாவடி கம்பத்தில் மோதியது .

அக்காரில் இருந்த 20 வயதுக்குட்பட்ட பெண் ஒருவரும் , இரண்டு ஆடவரும் காயம் அடைந்ததோடு அவர்கள் மயக்கம் அடைந்த நிலையில் இருந்தனர். அந்தசம்பவத்தில் நான்கு வயது சிறுவன் சொற்ப நிலையில் காயம் அடைந்தததாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Wan Azlan தெரிவித்தார் . அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் உதயோடு புத்ரா ஜெயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!