Latestஉலகம்மலேசியா

நெட்பிளிக்ஸை பார்க்க முடியும் கிளந்தானுக்கு திரையரங்குகள் தேவையில்லை – கிளந்தான் துணை மெந்திரிபுசார் கூறுகிறார்

கோலாலம்பூர், டிச 30 – கிளந்தான் மக்களுக்கு திரையரங்குகள் தேவையெல்லை என்றும் அவர்கள் நெட்பிளிக்ஸ் மூலம் திரைப்படங்களை பார்த்துக்கொள்வார்கள் என அம்மாநில துணை Menteri Besar Mohd Amar Abdullah தெரிவித்தார். திரைப்படங்களை பார்ப்பதற்கு கிளந்தான் மக்களுக்கு இதர ஏற்பாடுகள் உள்ளன. அவர்கள் மாற்று ஏற்பாடுகள் மூலம் திரைப்படங்களை பார்ப்பதை மாநில அரசாங்கம் தடுக்காது என Youtube-ப்பைச் சேர்ந்த Feng Ren Guan-னுக்கு வழங்கிய நேர்க்காணலில் Mohd Amar தெரிவித்தார்.

திரையரங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து கிளந்தான் மக்கள் பெரிய அளவில் பிரச்சனை ஏற்படுத்தவில்லை. அவர்கள் அதனை பெரிதுபடுத்துவதும் இல்லை. வீட்டில் நெட்பிளிக்ஸில் அவர்கள் திரைப்படங்களை பார்க்க முடியும். அவர்கள் அனைத்தையும் பார்க்கமுடியும். பணம் கொடுத்து திரையரங்கிற்கு சென்று எதற்கு படம் பார்க்க வேண்டும். வீட்டில் அமர்ந்துகொண்டு Kuaci-யை உட்கொண்டவாறு படம் பார்க்கலாம் என Mohd Amar கூறினார். 1990-ஆம் ஆண்டில் கிளந்தானில் அதிகாரத்திற்கு வந்த பாஸ் கட்சி திரையரங்குகள் மற்றும் சூதாட்ட நிலையங்களுக்கு தடைவிதித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!