Latestஉலகம்

நெதர்லாந்து வந்தடைந்த விமானப் பயணிகளில் 13 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு

ஆம்ஸ்டர்டாம் , நவ 29 – தென்னாப்பிரிக்காவிலிந்து நெதர்லாந்து தலைநகர்
ஆம்ஸ்டர்டாமிற்கு சென்ற 13 பேரிடம் ஒமிக்ரான் கிருமி இருப்பது கண்டறியப்பட்டது.

கோவிட் தொற்று இருப்பதை கண்டறிந்து அவர்களை தனித்து வைப்பதற்காக பரிசோதிக்கப்பட்ட 61 பயணிகளில் 13 பேரிடம் ஒமிக்ரான் தொற்று இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

அவர்களிடம் தொடர்ந்து பல்வேறு பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக நெதர்லாந்து சுகாதார அமைச்சர் Hugo de jonge தெரிவித்தார். அந்த கிருமிக்கு உள்ளானவர்கள் தனி ஹோட்டல் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கோவிட் தொற்றின் புதிய திரிபு வேகமாக பரவி வருவதால் நெதர்லாந்தில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தப்படுவதற்கு திட்டமிட்டுள்ள இந்த வேளையில் ஒமிக்ரான் தொற்று அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!