Latest
நெப்போலியன் போனபார்ட்டின் தொப்பி; RM9.86 மில்லியனுக்கு விலை போனது

பாரிஸ், நவம்பர் 21- மாவீரன் நெப்போலியன் போனபார்ட்டிற்கு சொந்தமானது என நம்பப்படும் தொப்பி ஒன்று, 19 லட்சத்து 30 ஆயிரம் யூரோ அல்லது 98 லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட்டிற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.
பிரான்ஸ், பாரிசிலுள்ள, ட்ரூட் ஏல மையத்தில் அந்த தொப்பி ஏலத்தில் விடப்பட்டது.
2014-ஆம் ஆண்டு, 18 லட்சத்து 80 ஆயிரம் யூரோ அல்லது 96 லட்சம் ரிங்கிட்டிற்கு விற்கப்பட்ட
நெப்போலியனின் மற்றொரு தொப்பியை காட்டிலும், இம்முறை ஏலத்தில் எடுக்கப்பட்ட தொப்பியின் விலை அதிகமாகும்.
அந்த பாரம்பரிய பைகார்ன் (bicorne) தொப்பி மாவீரன் நெப்போலியனின் வர்த்தக முத்திரையாகும். அவர் தனது வாழ்நாள் முழுவதும் அதுபோல சுமார் 120 தொப்பிகளை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
அதனால், வரலாற்று சிறப்பு மிகுந்த அந்த தொப்பிகள் அவ்வப்போது ஏலத்திற்கு வருவது வழக்கமாகும்.