Latestமலேசியா

நெரிசலைத் தவிர்க்க நெடுஞ்சாலையில் u-turn போட்ட வாகனங்களை ரவூப் போலீஸ் தேடுகிறது

ரவூப், ஏப்ரல் 8 – LTU எனப்படும் முதன்மை மத்திய வெளிவட்டச் சாலையில் u-turn அடித்துத் திரும்பி வைரலான வாகனங்களை, ரவூப் போலீஸ் அடையாளம் கண்டு வருகிறது.

வைரலான 2 காணொலிகளைப் பார்க்கும் போது, அச்சம்பவம் ஏப்ரல் 5-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கும் மாலை 4 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்படுவதாக ரவூப் மாவட்ட போலீஸ் தலைவர் Supritendan Mohd Shahril Abdul Rahman கூறினார்.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக திடீரென கார்களைத் திருப்பி, அவற்றின் ஓட்டுநர்கள் எதிர் திசையில் ஓட்டிச் செல்வது அக்காணொலிகளில் தெரிகிறது.

அப்படி u-turn போட்ட காரோட்டிகளில் ஒருவரான பெண்மணி காருக்குள் இருந்து எடுத்த காணொலிதான் வைரலாகியுள்ளது.

அப்பெண்ணின் கார் பதிவு எண்ணைச் சரியாக அடையாளம் காண முடியவில்லை; எனினும் JPJ-வின் MySikap வாயிலாக மேற்கொண்ட பரிசோதனையில் u-turn போட்ட மற்ற சில வாகனங்களை அடையாளம் கண்டிருப்பதாக Mohd Sharil சொன்னார்.

சம்பந்தப்பட்ட வாகனமோட்டிகளின் அப்பொறுப்பற்றச் செயல் சாலையைப் பயன்படுத்தும் மற்றவர்களுக்கும் ஆபத்தாய் முடியலாம் என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

நினைத்த மாத்திரத்தில் வாகனத்தைத் திருப்ப இது ஒன்றும் உங்கள் வீடல்ல; நெடுஞ்சாலை என சூடு பறக்க கருத்துகள் பதிவேற்றம் கண்டு வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!