Latestஉலகம்

நேப்பாளத்தில் நிகழ்ந்த கோர விபத்து; 32 பேர் பலி

காத்மாண்டு, அக் 13- நேப்பாள்குஞ் (Nepalgunj) பகுதியிலிருந்து கம்கத்தி நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று எதிர்பாராவிதமாக பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 32 பேர் மரணமடைந்தனர்.
கிட்டதட்ட 45 பேர் பயணித்த அந்தப் பேருந்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததாக முகு மாவட்டப் போலீஸ் அதிகாரி Rom Bahadur Mahat தெரிவித்தார்.
நேற்று மாலை 12.30 மணியளவில் முகு மாவட்டத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 22 பேர் மரணமடைந்தனர். இன்னும் 10 பேர் மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்துள்ள பலரது நிலைமை கவலை அளிப்பதாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனக் கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!