
காட்மண்டு , ஆக 8- நேப்பாளத்தில் பெய்த கடுமையான மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து இதுவரை 38 பேர் மாண்டனர். . நேப்பாள தலைநகர் காட்மண்டு உட்பட பல இடங்களில் மோசமாக வெள்ளம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதுவரை 38 பேர் மரணம் அடைந்தது உறுதிப்படுத்தப்பட்டதோடு 33 பேர் காணவில்லையென அறிவிக்கப்பட்டது. காட்மண்டுவுக்கு அருகே ஒரு கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அறுவர் காணவில்லை . நிலச்சரிவினால் முக்கிய நெடுஞ்சாலைகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக பெய்துவரும் மழையினால் காட்மண்டு பள்ளத்தாக்கில் பக்மதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் தலைநகர் காட்மண்டுவில் பல இடஙகளில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டன.