
காட்மண்டு, ஜன 25 – ரெக்டர் கருவியில் 5.8 அளவில் பதிவான நிலநடுக்கம் நேற்று நேப்பாளத்தை உலுக்கியது. பல வீடுகள் இதனால் சேதம் அடைந்ததோடு நில நடுக்கத்தின் அதிர்வு இந்தியத் தலைநகர் புதுடில்லியிலும் உணரப்பட்டது. காட்மண்டுவிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவிலுள்ள Jumla மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அமெரிக்க புவியியல் அதிகாரிகளும் உறுதிப்படுத்தினர். இந்த நிலநடுக்கம் வலுவானதாக இருந்ததாகவும் இதனால் அச்சத்திற்குள்ளான மக்கள் தெருக்களில் திரண்டனர். இதனிடையே தங்களது வீட்டிலுள்ள கூரை விசிறிகள் மற்றும் இதர பொருட்களும் நில அதிர்வில் ஆடியதாக புதுடில்லி மக்களில் பலர் சமூக வலைததளங்களில் பதிவிட்டனர்.