காட்மண்டு, செப்டம்பர்-29 – தெற்காசிய நாடான நேப்பாளத்தில் இடைவிடாமல் பெய்த மழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்களில் சிக்கி, இதுவரை 112 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஏராளமானோரைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் காட்மண்டுவில் மட்டுமே 34 பேர் மரணமடைந்தனர்.
வியாழக்கிழமை தொடங்கி பெய்து வரும் மழையில் 60-கும் மேற்பட்டோர் காயமடைந்த வேளை, 3,000 பேர் காப்பாற்றப்பட்டனர்.
நாடு முழுவதும் 63 இடங்களில் முக்கிய நெடுஞ்சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன.
இதையடுத்து பல்வேறு அமைச்சுகளை உட்படுத்திய அவசரக் கூட்டத்தை நேப்பாள இடைக்காலப் பிரதமர் கூட்டியுள்ளார்.
பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டு, தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.