
காட்மன்டு, ஜன 17 – நேப்பாளத்தில் விபத்துக்குள்ளான எட்டி ஏர்லைன்ஸ் விமானத்தின் கருப்புப் பெட்டிகளை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். விமானிகளுக்கிடையிலான உரையாடல்களைக் கொண்ட cockpit voice recorder மற்றும் விமான தரவுகளை கொண்ட Flight data Recorder ஆகிய இரண்டும் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டன. விபத்துக்குள்ளாகுவதற்கு முன் விமானத்தின் வேகம், பறக்கும் உயரம், திசை மற்றும் விமானியின் செயல்பாடு ஆகியவற்றை Flight Data Recordor கொண்டிருக்கும். ஞாயிற்றுக்கிழமையன்று காட்மண்டுவிலிருந்து சுற்றுலா நகரான பொக்ராவிற்கு 72 பேருடன் பயணமான அந்த விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பான முக்கிய தடயங்கள் அந்த கருப்பு பெட்டிகளில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.