புத்ராஜெயா, ஜனவரி-7 நேப்பாள எல்லையில் ரிக்டர் அளவைக் கருவியில் 6.5-தாக இன்று காலை ஏற்பட்ட நில நடுக்கத்தில், மலேசியர் எவரும் பாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை.
வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா அதனை உறுதிபடுத்தியுள்ளது.
என்றாலும், அங்குள்ள நிலவரங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்.
அந்தத் தெற்காசிய நாட்டிலுள்ள மலேசியர்களும் இந்த இக்கட்டான நேரத்தில் உள்ளூர் அதிகாரிகளின் உத்தரவைக் கேட்டு நடக்க வேண்டுமென அது அறிவுறுத்தியது.
தங்களின் இருப்பு குறித்து e-konsular மின்னியல் தளத்தில் பதிந்துகொள்வதோடு, ஆகக் கடைசி தகவல்களுக்கு காட்மண்டுவில் உள்ள மலேசியத் தூதரகத்துடன் தொடர்பிலிருக்குமாறும் அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
முன்னதாக நேப்பாள எல்லை அருகே திபெத்தில் ரிக்டர் அளவைக் கருவியில் 7.1-ராகப் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர்.
அதன் அதிர்வுகள் இந்தியாவின் பீகார், அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களிலும் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.